ஜப்பானின் பாபா வங்காவின் எச்சரிக்கை
5 ஆனி 2025 வியாழன் 14:08 | பார்வைகள் : 5872
பிரபல ஜோதிடக்கலைஞரான பாபா வங்காவைப்போல, ஜப்பானில் ஒரு ஜோதிடக்கலைஞர் கணித்துள்ள சில விடயங்கள் கவனம் ஈர்த்துள்ளன.
ஜப்பானின் பாபா வங்கா என அழைக்கப்படுபவர். ரியோ டட்சுகி (Ryo Tatsuki). டயானாவின் மரணம், கோவிட் முதலான விடயங்கள் குறித்து துல்லியமாக கணித்தவர் ரியோ.
இந்நிலையில், இன்னும் ஐந்து ஆண்டுகளில் மீண்டும் கோவிட் தாக்கும் என்றும், அது பேரழிவை ஏற்படுத்தும் என்றும் கணித்துள்ளார் ரியோ.
1999இல் அவர் வெளியிட்ட The Future as I See It என்னும் புத்தகத்தில், 2020இல் முன்னர் அறியப்படாத ஒரு வைரஸ் தாக்கும் என்றும், அது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் எழுதியுள்ளார் ரியோ.
தற்போது பல நாடுகளில் மீண்டும் கோவிட் பரவத்துவங்கியுள்ளதைத் தொடர்ந்து, அவர் குறிப்பிட்டது கோவிடைத்தான் என மக்கள் நம்புகிறார்கள்.
இதற்கிடையில், ரியோ கணித்துள்ள வேறொரு விடயம் ஜப்பானின் வருவாயையே பாதிக்கும் அளவுக்கு கவனம் ஈர்த்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு புத்தகத்தில், 2025ஆம் ஆண்டு, அதாவது, இந்த ஆண்டு ஜூலை மாதம், ஒரு பெரிய நிலநடுக்கம் ஜப்பானைத் தாக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு ஒரு நிலநடுக்கம் ஜப்பானைத் தாக்கும் என ரியோ கணிக்க, அதேபோல் ஒரு நிலநடுக்கம் 2011ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 11அம் திகதி ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கியது.
ஆகவே, தற்போது அடுத்த மாதம் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஜப்பானைத் தாக்கவிருப்பதாக ரியோ கணித்துள்ளதால், ஜப்பானுக்கு சுற்றுலா வர முன்பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாம்.
விடயம் என்னவென்றால், சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை மேலும் வீழ்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், ஜப்பானுக்கு சுற்றுலா மூலம் வரும் வருவாய் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan