பசியால் சூப்பர் மார்க்கெட்டுக்குள் அத்துமீறிய யானை: தாய்லாந்தில் பரபரப்பு!

5 ஆனி 2025 வியாழன் 12:08 | பார்வைகள் : 1378
தாய்லாந்தில் காட்டு யானை ஒன்று சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து தின்பண்டங்களுக்காக அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை தாய்லாந்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் "பிளாய் பியாங் லெக்"(Plai Biang Lek) என்ற பெயருடைய காட்டு யானை ஒன்று, தின்பண்டங்களுக்காக அத்துமீறி நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் வடகிழக்கு தாய்லாந்தில் உள்ள காவ் யாய் தேசிய பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ள அந்தக் கடையில், பிரம்மாண்டமான ஆண் யானை அமைதியாக நுழைந்த காட்சி தெளிவாக உள்ளது.
சுமார் 30 வயது மதிக்கத்தக்க பிளாய் பியாங் லெக் யானை, கடைக்கு வெளியே சிறிது நேரம் நின்று, பின்னர் உள்ளே நுழைந்தது.
வீடியோ காட்சிகளில், யானை நேராக கடை கவுண்டரை நோக்கிச் சென்று, அங்கிருந்த பல்வேறு தின்பண்டங்களை நிதானமாக எடுத்துச் சாப்பிடுவதைக் காண முடிகிறது.
தேசிய பூங்கா ஊழியர்கள் அதை விரட்ட முயன்றபோதிலும், யானை அசைவின்றி தனது தின்பண்ட விருந்தைத் தொடர்ந்தது.
நல்ல வேளையாக, யானை யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1