நாமெல்லாம் முஸ்லிம் நாடுகள் மலேஷியாவுக்கு வலை விரித்த பாக்., இந்திய குழு பயணத்தில் ருசிகரம்
5 ஆனி 2025 வியாழன் 05:39 | பார்வைகள் : 7397
நாமெல்லாம் முஸ்லிம் நாடுகள்; இந்திய எம்.பி.,க்கள் குழுவை சந்திக்க வேண்டாம் என்ற பாகிஸ்தான் கூறியதை, தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியா ஏற்கவில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் முயற்சிகளுக்கு துணை நிற்பதாக, நம் எம்.பி.,க்கள் குழுவிடம் மலேஷியா உறுதிபட கூறியுள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இது தொடர்பாக, உலக நாடுகளுக்கு விளக்குவதற்காக, ஏழு அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள் குழுவை பல நாடுகளுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ளது.
மத்திய அமெரிக்க நாடான பனாமா, பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, காங்கிரசைச் சேர்ந்த மூத்த எம்.பி.,யான சசி தரூர் தலைமையிலான குழு, இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தது.
அதை ஏற்றுக் கொண்டு, தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, இந்தியாவின் முயற்சிகளுக்கு பனாமா ஆதரவு தெரிவித்தது.
ஜம்மு -- காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு நேர்மையான, சர்வதேச அளவிலான விசாரணை தேவை' என மலேஷியா கூறியிருந்தது. தன்னுடன் தொலைபேசியில் பேசிய, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடமும், இந்தக் கருத்தை, மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.
இதற்கிடையே, மலேஷியாவுக்கு, ஐக்கிய ஜனதா தளத்தில் சஞ்சய் ஜா தலைமையிலான, எம்.பி.,க்கள் குழு பயணம் மேற்கொண்டது. இதற்கிடையே, மலேஷியாவிடம் பேசிய பாகிஸ்தான் தரப்பு, 'நாமெல்லாம் முஸ்லிம் நாடுகள்; இந்திய குழுவுடன் பேச வேண்டாம். அந்தப் பயணத்தை ரத்து செய்து விடுங்கள்' என்று கூறியது.
மேலும், ஜம்மு - காஷ்மீர் விவகாரம், ஐ.நா., சபையில் உள்ளதால், இந்தியக் குழுவை சந்திக்க வேண்டாம் என்றும் பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், இந்தக் கோரிக்கையை, மலேஷியா ஏற்கவில்லை. இந்தியக் குழுவை, மலேஷிய உயர் அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அப்போது இந்தியத் தரப்பில் கூறப்பட்டதை அவர்கள் ஆமோதித்தனர்.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாக, மலேஷியா வெளிப்படையாக கூறியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan