அருங்காட்சியகத்தில் திருடப்பட்ட மக்ரோன் சிலை.. EDF தலைமைச் செயலகத்துக்கு முன்பாக மீட்பு!!
4 ஆனி 2025 புதன் 13:00 | பார்வைகள் : 4482
Grévin அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்ட ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் மெழுகு சிலை, பரிசில் உள்ள EDF தலைமைச் செயலகத்தின் முன்பாக இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டது.
“ரஷ்யாவை வெளிப்படையாக எதிர்க்கும் ஜனாதிபதி மக்ரோன் - ரஷ்யாடன் எரிபொருள் வியாபாரத்தை மேற்கொள்கிறது” என குற்றம் சாட்டிய Greenpeace எனும் தொண்டு நிறுவனம், அதனைக் கண்டிக்கும் விதமாக இந்த மெழுகு சிலையினை திருடியிருந்தது.
இந்நிலையில், பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள பிரெஞ்சு மின்சாரவாரியத்தின் (Électricité de France) தலைமைச் செயலகத்தின் முன்பாக குறித்த சிலையினை குறித்த தொண்டு நிறுவன ஊழியர்கள் வைத்துள்ளனர்.
சிலை எந்தவித சேதங்களும் இல்லாமல் இறப்பான முறையில் இருந்ததாகவும், அதனை காவல்துறையினர் மீட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan