பிரான்ஸிலிருந்து இலங்கை சென்ற புதிய ஏர்பஸ் A330-200 விமானம் - பார்வையிட குவிந்த மக்கள்
4 ஆனி 2025 புதன் 10:06 | பார்வைகள் : 3376
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் A330-200 எனும் விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
இந்த விமானம் இன்று காலை பிரான்சின் பாரிஸிலிருந்து இலங்கை சென்றுள்ளது.
பிரான்ஸிலிருந்து செல்லும் இந்த விமானம், கொழும்பின் கடற்கரையோரப் பகுதியில் 1,500 அடி உயரத்தில் தாழ்வாக பறந்து தரையிறங்கியுள்ளது.
மொரட்டுவை கடற்கரைப் பகுதியில் இருந்து கொழும்பு போர்ட் சிட்டியின் தெற்கு முனையம் வரை, காலை 8 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் குறுித்த விமானம் தாழ்வாகப் பறக்கும் காட்சிகளை அவதானிக்கும் வாய்ப்பு மக்களுக்கு ஏற்பட்டது.
இதேவேளை, இலங்கையை உலகத்துடன் இணைக்கும் நீண்ட மற்றும் குறுகிய தூர பயணங்களுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸூடன் இணையும் இந்த விமானத்தின் முதல் வருகையைக் காண காலி முகத்திடலில் ஏராளமானோர் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan