பள்ளிவாசலில் இருந்து குரான் திருடி எரிப்பு.. ஒருவர் கைது!!
4 ஆனி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 6326
பள்ளிவாசல் ஒன்றில் இருந்து குரான் ஒன்றை திருடி அதனை எரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லியோனின் புறநகரான Villeurbanne இல் இச்சம்பவம் ஜூன் 2, திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. அன்று காலை நேர வழிபாட்டின் போது மக்களோடு மக்களாக வருகை தந்த நபர் ஒருவர், பள்ளிவாசலில் இருந்த குரான் நூலை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். பின்னர் அதனை பள்ளிவாசலுக்கு வெளியே வைத்து எரியூட்டியுள்ளார்.
குறித்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
குரானை எரியூட்டிய சம்பவத்துக்கு பல மதத்தலைவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். லியோன் நகரபிதா கண்டனம் தெரிவித்துள்ளார். “இஸ்லாம் வெறுப்பின் காரணமாக இடம்பெற்ற இச் சம்பவம் கண்டனத்துக்குரியது!” என அவர் தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan