மொஹமட் அம்ரா மீண்டும் பரிசில் விசாரணைக்கு – சிறை அதிகாரிகள் சங்கங்களில் கடும் எதிர்ப்பு!!
4 ஆனி 2025 புதன் 00:08 | பார்வைகள் : 5071
கொண்டே-சூர்-சார்த் (Condé-sur-Sarthe) சிறையிலிருந்து மொஹமட் அம்ரா 'அடுத்த வாரம்' பரிஸுக்கு கொண்டு செல்லப்படவுள்ளார். கடந்த ஆண்டில் ஏற்பட்ட தாக்குதல் செய்து தப்பிச் சென்றதில், இரு சிறை அதிகாரிகள் உயிரிழந்ததையிட்டு மேலதிக விசாரணைகள் நடைபெற உள்ளன. 2024 மே 14 அன்று, அம்ரா ஒரு வழக்குத் தொடர்பான விசாணைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, இன்கார்வில் சுங்கச் சாவடியில் (péயபந ன'ஐnஉயசஎடைடந) நடைபெற்ற வாகனத் தாக்குதலில் இரு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர். அத்துடன் அவர் தப்பிச் சென்றார். பின்னர், 9 மாதம் கழித்து, 2025 பிப்ரவரியில் ரோமானியாவில் கைது செய்யப்பட்டார்.
தற்போது, சட்ட விசாரணைகளிற்காக, நோர்மோந்தியிலுள்ள கொண்டே-சூர்-சார்த் சிறையிலிருந்து, பரிஸ் நீதிமன்றத்தில் உள்ள குழுவன்முறை மற்றும் பொலைக் குற்றங்களுக்கு எதிரான தேசிய பிரிவுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளார்.
'இது ஒரு பெரிய அவமானம், எமக்கான துரோகம் போன்றது. மிகப்பெரிய செலவாகவும், அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்தாகவும் இது அமையும். கடந்த தவறுகளில் நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. விசாரணை நீதிபதி நேரில் வர வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். இவன் போன்றவர்களிற்கு விசாரணை இருந்தாலும், காணொளி விசாரணை (Visio) முறையே பொதுவாக பயன்படுத்தப்பட வேண்டும்,' என FO Justice சங்கத்தின் துணை செயலாளர் யோவான் காரா தெரிவித்துள்ளார்.
'இது புரிய முடியாததும், இன்கார்விலில் இறந்த மற்றும் காயம் அடைந்த நம் தோழர்களை அவமதிப்பதும்தான்.' எனவும் கடும் கோபத்துடன் தெரிவித்துள்ளனர்.
இதற்குப் பதிலளித்த சம்பவ சமயத்தில் உள்துறை அமைச்சராகவும் தற்போது நீதியமைச்சருமான ஜெரால்ட் தர்மனன்
'நீதிபதியால் அவரை விசாரிக்க முடியும் என்பதற்காக, அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். ஜூன் மாதத்தில் அமலுக்கு வரவிருக்கும் 'போதைக் கடத்தல் எதிர்ப்புச் சட்டம்' மூலம் எதிர்காலத்தில் இத்தகைய விசாரணைகள் காணொளிக் காட்சி மூலமாக நடக்கக்கூடும். இதனால் செலவுகள் மற்றும் ஆபத்துகள் குறைக்கப்படும்.'
"RAID,GIGN சிறப்பு படைகள் மிகுந்த தைரியமுள்ள வீரர்கள். எனவே எதுவும் நடக்காது என்று நம்புகிறேன்.'
எனத் தெரிவித்துள்ளார்.
இன்கார்வில் சம்பவத்திற்கு முன்னரும், மொஹமட் அம்ரா இரண்டு முறை தப்ப முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அந்த வழக்கில், அம்ராவும் உட்பட மொத்தம் 38 பேர், துப்பாக்கிச் சூடு, தப்பிச் செல்வது, குற்றக்குழுக்களின் குற்றச்செயல்கள் உள்ளிட்ட குற்றங்களிற்காக விசாரணை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan