MaPrimeRénov திட்டம் இடைநிறுத்தம்!!
3 ஆனி 2025 செவ்வாய் 22:59 | பார்வைகள் : 6124
வீட்டை புதுப்பிக்க வழங்கும் தொகையானது (MaPrimeRénov), செவ்வாய்க்கிழமை ஜூன் 3 அன்று, பொருளாதார அமைச்சும் மற்றும் வீடமைப்பு அமைச்சும், இந்த ஆண்டு கோடையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்க பரிசீலித்து வருகின்றது. இது தொடர்பான இறுதி முடிவுகள் ஜூலை மாத தொடக்கத்தில் எடுக்கப்படும்.
வீட்டை புதுப்பிக்க நிதியளிக்கும் இந்தத் திட்டத்தில், மிக அதிக அளவில் கோரிக்கைகள் வந்துள்ளன. இதன் காரணமாக, மோசடி, தவறான மதிப்பீடுகள், மற்றும் நிதிச் சுமை ஆகியவையும் அதிகரித்துள்ளன. Anahவின் (l'Agence nationale de l'habitat) தரவுகளின்படி, 2025 இல் முதல் நான்கு மாதங்களில் மூன்று மடங்குக்கும் அதிகமான வீடுகள் மானியத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
நிதி நிலைமை கடுமையாக உள்ளதால், இத்திட்டத்தை "தற்காலிகமாக இடைநிறுத்துவது" பற்றி அரசு பரிசீலித்து வருகின்றது.
Capeb (கைவினைஞர் மற்றும் சிறிய கட்டிட நிறுவனங்களின் கூட்டமைப்பு) எனும் சிறிய கட்டிட நிறுவனங்களின் கூட்டமைப்பு, இத்திட்டம் இடைநிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், மோசடியை கட்டுப்படுத்த தேவையான கவனத்தையும் கோரியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan