பவன் கல்யாண் பட புரமோஷனில் ரஜினி?
3 ஆனி 2025 செவ்வாய் 17:21 | பார்வைகள் : 2278
ஆந்திர மாநில துணை முதல்வராக பவன் கல்யாண் பதவியேற்ற உடன் ரிலீஸ் ஆகும் அவரது முதல் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பவன் கல்யாண், நிதி அகர்வால் நடிப்பில், கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் ’ஹரிஹர வீர மல்லூ’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, ஜூன் 12-ம் தேதி வெளிவர உள்ளது.
பவன் கல்யாண் துணை முதல்வரான பின் வெளியாகும் முதல் படம் என்பதாலும், பிரம்மாண்டமாக ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாலும் இந்த படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திருப்பதியில் இந்த படத்தின் பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆகிய இருவரும் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் கலந்து கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan