அவதானம் வாகனங்களின் இலக்கத் தகடுகள் திருடப்படுகிறது. காவல்துறை.

4 புரட்டாசி 2023 திங்கள் 20:07 | பார்வைகள் : 13739
அண்மைக்காலமாக வாகனங்களின் இலக்கத் தகடுகள் திருடப்படுவது தெரியவந்துள்ளது. எனவே வாகன உரிமையாளர்கள் கவனமாக இருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலங்கள் நகராமல் நிறுத்தப்படும் வாகனங்களின் இலக்கத் தகடுகளை பிரதியெடுத்தும், இலக்கத் தகடுகளை களவாடியும் தங்கள் வாகனங்களில் பொருத்தி பல்வேறு பட்ட குற்றச் செயல்களை செய்து வருவதாக காவல்துறை எச்சரித்து உள்ளது.
அண்மையில் ஒரு பெண்ணின் ஒரு வருடம் நகராமல் நிறுத்தப்பட்ட தனது வாகனத்திற்கு; பிழையான தரிப்பிட குற்றத்துக்கான தண்டம், குறித்த வேகத்தை விட அதிகமான வேகத்தில் சென்றதிற்கான தண்டம், என பல கடிதங்களை பார்த்து தான் அதிர்ச்சியடைந்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளார்.
இத்தகைய பல வழக்குகள் பல பகுதிகளில் பதிவான நிலையில்; காவல்துறை நடத்திய விசாரணைகளில். நகராமல் நிறுத்தப்பட்ட வாகனங்களின் இலக்கத் தகடுகளை களவாடி குறித்த கும்பல் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
எனவே வாகன உரிமையாளர்கள் கவனமாக இருக்கும்படி காவல்துறை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025