Levallois-Perret: உளவுத்துறை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்!
3 ஆனி 2025 செவ்வாய் 16:06 | பார்வைகள் : 9218
திங்கட்கிழமை மாலை, Levallois-Perret (Hauts-de-Seine) இல் அமைந்துள்ள DGSI (பிரெஞ்சு புலனாய்வு சேவை) வளாகத்தில் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் வாகனம் நிறுத்துமிடத்தில், தனது சேவை காரில் இறந்து கிடந்துள்ளார். அவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக தெரிகின்றது.
"மரணத்திற்கான காரணங்களைத் கண்டறிவதற்கான" விசாரணை திங்கட்கிழமை மாலை, உள் பாதுகாப்பு சேவையான IGSI இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம், இதே போன்று ஒரு காவல்துறை அதிகாரி பிரெஞ்சு புலனாய்வு சேவையின் அடித்தளத்தில் தனது சேவைத் துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மற்றொரு அதிகாரி வீட்டில் தனிப்பட்ட வாழ்க்கையால் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாக தலையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எனவே இது வெறும் ஐந்து மாதங்களில் பிரெஞ்சு உளவுத்துறைக்குள் நடக்கும் மூன்றாவது தற்கொலையாகும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan