ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு..
3 ஆனி 2025 செவ்வாய் 16:21 | பார்வைகள் : 6337
விஜய் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில் "ஜனநாயகன்" என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. கடந்த அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், சென்னை, கொடைக்கானல் உள்பட பல்வேறு பகுதிகளில் இந்த படப்பிடிப்பு நடைபெற்றது.
இந்தப்படம் தான் விஜயின் கடைசி படம் என்றும், இந்த படத்தை முடித்துவிட்டு அவர் முழு நேரமாக அரசியலில் இறங்கப் போகிறார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, இந்த படத்திற்கு மற்ற படங்களை விட கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்றுடன் "ஜனநாயகன்" படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை அடுத்து, திரையுலகில் இருந்து விஜய்க்கு வழி அனுப்பு விழாவாக கடைசி தின படப்பிடிப்பு நடந்தது என்று கூறப்படுகிறது.
விஜய் , பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பாஜு, பிரியாமணி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, கலை இயக்குனராக செல்வகுமார், படத் தொகுப்பாளராக பிரதீப் ராகவ், உடை வடிவமைப்பாளராக பல்லவி, பப்ளிசிட்டி டிசைனராக கோபி பிரசன்னா ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan