Paristamil Navigation Paristamil advert login

வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபிக்க வேண்டும்: சீமான் சவால்

வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபிக்க வேண்டும்: சீமான் சவால்

4 ஆனி 2025 புதன் 05:02 | பார்வைகள் : 1125


கன்னடம் மொழி தமிழில் இருந்து உருவாகவில்லை என்று வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபித்துவிட்டால் எல்லாரும் அமைதியாகி விடுவார்கள். கமல் மன்னிப்பு கேட்க கூடாது'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: கமல் வரலாற்று பூர்வமான ஆதாரத்தை சொல்லி உள்ளார். தமிழ் உடன் சமஸ்கிருதம் கலந்து பேசி பேசி, அதில் இருந்து பிரிந்து பிறந்த மொழிகள் தான் கன்னடம், தெலுங்கு, மலையாளம்.

கன்னடம் மொழி தமிழில் இருந்து உருவாகவில்லை என்று வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபித்துவிட்டால் எல்லாரும் அமைதியாகி விடுவார்கள். கமல்ஹாசன் கூறியது வரலாறு. அதை வைத்துக்கொண்டு படத்தை திரையிட அனுமதிக்க மாட்டேன் என்பது சிறுபிள்ளை விளையாட்டு. நாங்கள் நதி நீரை கேட்டாலே உங்களுக்கு பிரச்னை என்றால் என்ன செய்வது?

மன்னிப்பு கேட்கவில்லை என்றால் என்ன செய்து விட போகிறீர்கள்? கமல் மன்னிப்பு கேட்க கூடாது. நாங்கள் எல்லோரும் கமலுக்கு துணை நிற்போம். கமல் கன்னடர்களையும், மக்களையும் அவமதிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. தமிழில் இருந்து வந்தது தான், தமிழின் குழந்தை தான் கன்னடம் என்று சொல்கிறார். கே.ஜி.எப்-01, கே.ஜி.எப்.2, காந்தாரா ஆகிய படங்களுக்கு நாங்கள் ஏதாவது இடையூறு செய்தோமா? இவ்வாறு சீமான் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்