Paristamil Navigation Paristamil advert login

Rosny-sous-Bois : வீடொன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 626 கிலோ கஞ்சா!!

Rosny-sous-Bois : வீடொன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 626 கிலோ கஞ்சா!!

3 ஆனி 2025 செவ்வாய் 14:25 | பார்வைகள் : 4104


Rosny-sous-Bois (Seine-Saint-Denis) நகரில் உள்ள வீடொன்றில் பெருமளவான கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், 93 ஆம் மாவட்ட காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

மே 29 ஆம் திகதி வியாழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 626 கிலோ கஞ்சாவும், ஒரு கிலோ கொக்கைனும், €48,000 பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வந்த விசாரணைகளை அடுத்து இந்த பறிமுதல் வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

அத்தோடு, வெளிநாடு ஒன்றில் பதிவு செய்யப்பட்ட வாகனம் ஒன்றுடன், நால்வர் கொண்ட குழு ஒன்றையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்