Paristamil Navigation Paristamil advert login

வன்முறையார்களுக்கு - கடுமையான தண்டனை வேண்டும்...??!!

வன்முறையார்களுக்கு - கடுமையான தண்டனை வேண்டும்...??!!

3 ஆனி 2025 செவ்வாய் 10:00 | பார்வைகள் : 3397


PSG அணியின் வெற்றியை அடுத்து, பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் வன்முறையில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வேண்டும் என நீதித்துறை அமைச்சர் Gérald Darmanin கோரியுள்ளார்.

ஜூன் 2, நேற்று திங்கட்கிழமை வன்முறையார்களில் நால்வர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு இடைநிறுத்தப்பட்ட தண்டனைகள் மற்றும் குறைந்த தண்டனைகள் வழங்கப்பட்டிருந்தது. இவ்வகை தண்டனை குற்றங்களை கட்டுப்படுத்தாது என Gérald Darmanin கருத்து வெளியிட்டுள்ளார்.
பொதுச் சொத்தை சேதப்படுத்துவதையும், கடைகளையும், தனியாரின் வாகனங்களை சேதப்படுத்துவதும் குறைந்த பட்ச தண்டனை கொண்ட குற்றம் என கருதமுடியாது என அவர் தெரிவித்தார். 

குறைந்தபட்ச தண்டனைகளுக்குப் பதிலாக கடுமையான தண்டனைகளை வழங்கவேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்