Paristamil Navigation Paristamil advert login

வீரியமில்லா கொரோனா பரவலால் புதிய கட்டுப்பாடுகள் கிடையாது

வீரியமில்லா கொரோனா பரவலால் புதிய கட்டுப்பாடுகள் கிடையாது

3 ஆனி 2025 செவ்வாய் 08:02 | பார்வைகள் : 2752


தமிழகத்தில் உயிர் பாதிப்பை ஏற்படுத்தாத கொரோனா வைரஸ் இருப்பதால், புதிய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படாது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு புதிய சீருடைகள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். பின், அவர் கூறியதாவது:

தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கொரோனா பரவல் இல்லை. குறிப்பாக, உயிர் பாதிப்பை ஏற்படுத்தாத வைரஸாக இருப்பதால், புதிய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படாது.

அதேநேரம், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். தனிமனித இடைவெளியும், தும்மும் போதும், இருமும் போதும், முகத்தை கைகுட்டையால் மூடிக்கொள்வதும் அவசியம்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்கள், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியம்.

இதைத்தான், ஐந்து ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்; தற்போதும் சொல்கிறோம். இதை தவிர, வேறு எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்