Paristamil Navigation Paristamil advert login

Aubervilliers : ஸ்கூட்டரில் பயணித்த சிறுவனை மோதி தள்ளிய மகிழுந்து!!’

Aubervilliers : ஸ்கூட்டரில் பயணித்த சிறுவனை மோதி தள்ளிய மகிழுந்து!!’

2 ஆனி 2025 திங்கள் 20:26 | பார்வைகள் : 4076


Aubervilliers  நகரில் இன்று ஜூன் 2, திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தொன்றில் சிறுவன் ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அங்குள்ள Le Corbusier பாடசாலைக்கு முன்பாக Rue Léopold-Rechossière வீதியில் காலை 10.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. ஸ்கூட்டர் ஒன்றில் பயணித்த 16 வயதுடைய சிறுவன் ஒருவரை மகிழுந்து ஒன்று மோதித்தள்ளியுள்ளது.

இதில் தூக்கி வீசப்பட்ட குறித்த சிறுவன், படுகாயமடைந்துள்ளார்.  அவசரப்பிரிவு மருத்துவர்கள் சிறுவனை மீட்டு  Beaujon  மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுவன் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது, 

சம்பவடத்தின்போது சிறுவன் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்