அனைத்து தொலைபேசிகளிலும் இயங்கும் Navigo Liberté +!!
2 ஆனி 2025 திங்கள் 19:26 | பார்வைகள் : 4634
நவிகோவின் பயண அட்டை இதுவரை ஆப்பிளின் ஐபோன்களிலும், ஒருசில ஆண்ட்ரோயிட் தொலைபேசிகளிலும் இயங்கி வந்த நிலையில், இம்மாதம் முதல் அனைத்து NFC வசதி கொண்ட தொலைபேசிகளிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Navigo Liberté + பயணச்சிட்டையை தொலைபேசியில் பதிவேற்றி பின்னர் அதனை தொடந்து நிலையங்களில் ‘ஸ்கேன்’ செய்வதூடாக பயணங்களை தடையின்றி மேற்கொள்ள முடியும்.
இம்மாதம் ஜூன் 23 ஆம் திகதி முதல் இந்த வசதிகள் நடைமுறைக்கு வருவதாகவும், தொலைபேசிகளில் NFC வசதி இருந்தால் போதுமானது உங்கள் தொலைபேசிகளில் Navigo Liberté + அட்டைகளை பதிவேற்றிக்கொள்ள முடியும். அத்தோடு தொலைபேசி வழியாகவே அதனை மீள் நிரப்பவும் முடியும் என தெரிவிக்கப்படுகிறது,. \
இல்-து-பிரான்சுக்குள் Liberté + சேவையினை 1.3 மில்லியன் பேர் பயன்படுத்தி வருகின்றனர். இல் து பிரான்சுக்குள் 3 மில்லியன் பேர் பொது போக்குவரத்தை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan