மக்ரோனின் உருவம் ரஷ்ய தூதரகத்தின் முன்பாக வைக்கப்பட்டுள்ளது!
2 ஆனி 2025 திங்கள் 18:43 | பார்வைகள் : 5970
கிரீன்பீஸ்( Greenpeas) ஆர்வலர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் உருவ சிலை திருட்டுக்குப் பொறுப்பேற்றுள்ளார்.
ரஷ்யாவுடனான பிரான்சின் பொருளாதார உறவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, ஆர்வலர்கள் 40,000 யூரோ மதிப்புமிக்க சிலையை, பரிஸ் 16வது வட்டாரத்தில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகத்தின் முன் வைத்துள்ளனர். மேலும் கிரீன்பீஸ் அமைப்பு அந்தச் சிலையை "கடனாக" எடுத்து ரஷ்ய தூதரகத்துக்கு முன் வைத்ததாக செய்திக்குறிப்பு ஒன்றில் வெளியிட்டுள்ளது.
இது, பிரான்ஸ்–ரஷ்யா இடையிலான பொருளாதார உறவுகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டமாகும். கிரீன்பீஸ் அமைப்பு மக்ரோனின் இரட்டை நிலைப்பாட்டை விமர்சிக்கிறது. "அவர் உக்ரைனை ஆதரிக்கிறாரென கூறினாலும், பிரெஞ்சு நிறுவனங்கள் ரஷ்யாவுடன் வியாபாரத்தை தொடர அனுமதித்துள்ளார்" என குற்றம்சாட்டியுள்ளது.
பரிஸ் 9வது வட்டார காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan