Starlink இணைய சேவையை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

2 ஆனி 2025 திங்கள் 18:06 | பார்வைகள் : 6764
இணையச் சேவை வழங்குநரான Starlink அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.
Starlink இலிருந்து பெறப்படவுள்ள தகவல் கட்டுப்பாட்டு பலகை (Dashboard) கிடைத்தவுடன், எவ்வித தாமதமும் இன்றி சேவைகளை ஆரம்பிக்க முடியும் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி, அனைத்து முன்நிபந்தனைகளையும் அரசாங்கம் நிறைவு செய்துள்ளதாகப் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொடர்பு மற்றும் தகவல் கொள்கைக்கான ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தூதுவர் ஸ்டீவ் லாங்குடன் சிங்கப்பூரில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.