Paristamil Navigation Paristamil advert login

தக்லைஃப்' படம் தொடர்பில் கமல் எடுத்த அதிரடி நடவடிக்கை.

தக்லைஃப்' படம்  தொடர்பில்  கமல் எடுத்த அதிரடி நடவடிக்கை.

2 ஆனி 2025 திங்கள் 18:31 | பார்வைகள் : 3603


தக்லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், "தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்" என்று கமல்ஹாசன் கூறியதற்கு, கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அதுமட்டுமின்றி, ’தக்லைஃப்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் கன்னட அமைப்புகள் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், கர்நாடக ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ’தக்லைஃப்’ படத்தின் வெளியீட்டுக்கு எந்த விதமான இடையூறும் ஏற்படக்கூடாது என்றும், தனது படம் வெளியாவதை கர்நாடக அரசு, காவல்துறை மற்றும் திரைப்பட வர்த்தக அமைப்புகள் தடுக்கக்கூடாது என்றும், திரைப்படம் ரிலீஸ் ஆகும் போது போதிய பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நீதிமன்றம் கமல்ஹாசனுக்கு ஆதரவாக உத்தரவிட்டால் என்ன செய்வது?" என்று கன்னட அமைப்புகள் தற்போது கடும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்