தயாரிப்பாளராகும் ரவி மோகன்.....

2 ஆனி 2025 திங்கள் 18:31 | பார்வைகள் : 1868
நடிகர் ரவி மோகன் தற்போது தொடர்ச்சியாக படங்களில் நடித்து பிசியாக இருக்கும் நிலையில், ஒரு படத்தை அவரே தயாரிக்க இருப்பதாகவும், அந்த படம் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்ற நிலையில், அவர் ஒரு ஹீரோவாகவும், இன்னொரு ஹீரோவாக மாஸ் நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரவி மோகன் தற்போது ’கராத்தே பாபு’, ’ஜெனி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ’பராசக்தி’ படத்திலும் ஒரு முக்கிய இடத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஒரு திரைப்படத்தை ஜெயம் ரவியே தயாரிக்க இருப்பதாகவும், அந்த படத்தை கார்த்திக் யோகி என்பவர் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இவர் ஏற்கனவே சந்தானம் நடித்த ’வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்ற நிலையில், ஜெயம் ரவி ஒரு ஹீரோவாகவும், இன்னொரு ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1