நிரந்தர ரசாயனம் கலந்த இறைச்சியை விற்கும் சுவிஸ் மாகாணம்
2 ஆனி 2025 திங்கள் 16:06 | பார்வைகள் : 8661
சுவிஸ் மாகாணமொன்று, நிரந்தர ரசாயனங்கள் என அழைக்கப்படும் ரசாயனப் பொருட்கள் கலந்த இறைச்சியை விற்பனை செய்வதால் ஃபெடரல் அதிகாரிகள் கோபமடைந்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் Sankt Gallen மாகாணத்தில் உற்பத்தியாகும் இறைச்சியில், கடந்த ஆண்டு PFAS என்னும் ரசாயனம் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த polyfluoroalkyl substances அல்லது PFAS என்னும் ரசாயனம், நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்கள், உணவு பார்சல் செய்ய பயன்படுத்தப்படும் கவர்கள் போன்றவற்றில், தண்ணீர் புகாமல் இருப்பதற்காகவும் அவை வெப்பத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் ரசாயனம் ஆகும்.
இந்த ரசாயனம் எளிதில் சிதைக்கமுடியாத ஒரு ரசாயனம் என்பதால், அது மண்ணில் அதிக அளவில் படிவதுடன் மனித உடலிலும் நுழைந்துவிடும் அபாயம் உள்ளது. ஆகவேதான் அது நிரந்தர ரசாயனம் என அழைக்கப்படுகிறது.
ஆக, இந்த PFAS என்னும் ரசாயனம், Sankt Gallen மாகாணத்தில் உற்பத்தியாகும் இறைச்சியில் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலும், அந்த மாகாணம் தொடர்ந்து சுவிட்சர்லாந்து முழுவதும் அந்த இறைச்சியை விற்பனை செய்துவருகிறது.
அந்த இறைச்சி நச்சுத்தன்மை கொண்டதல்ல என்றும், ஆகவே அதை உண்ணலாம் என்றும் அம்மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், அதை ஏற்க மறுக்கும் ஃபெடரல் அதிகாரிகள், Sankt Gallen மாகாணம் விதிகளை மீறுவதாக தாங்கள் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan