Paristamil Navigation Paristamil advert login

ஆசிரியர்கள் அதிகளவில் தாக்குதலுக்கு உள்ளாகும் மாவட்டமாக Seine-Saint-Denis !!

ஆசிரியர்கள் அதிகளவில் தாக்குதலுக்கு உள்ளாகும் மாவட்டமாக Seine-Saint-Denis !!

2 ஆனி 2025 திங்கள் 07:03 | பார்வைகள் : 2121


ஆசிரியர்கள் அதிகளவில் தாக்குதலுக்கு உள்ளாகும் மாவட்டமாக Seine-Saint-Denis உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உடல் ரீதியாக தாக்கப்படுவது, அவமதிப்பது, உயிர் அச்சுறுத்தல் விடுவது, தகாத வார்த்தைப் பிரயோகங்கள் என Seine-Saint-Denis மாவட்ட ஆசிரியர்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகுவதாக ஆசிரியர் நலச் சங்கம் தெரிவிக்கிறது.

ஆரம்பபாடசாலை தொடக்கம் நடுநிலை பாடசாலை ஆசிரியர்கள் வரை தாக்கப்படுகின்றனர். 2024 ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து 2025 ஏப்ரல் வரையான  எட்டு மாதங்களில் 534 சம்பவங்கள் இது போல் இடம்பெற்றுள்ளன. சென்ற வருத்தில் மொத்தமாகவே 235 சம்பவங்கள் இதுபோல் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன.

”ஆசிரியர்கள் தாக்கப்படுவதும், அவமதிக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என Seine-Saint-Denis மாவட்டத்துக்கான ஆசிரியர் நலச் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்