விளையாட்டு வெற்றிகள் பின்னணியில் தொடரும் கொடூர நிகழ்வுகள்! இது பாரம்பரியமா?
2 ஆனி 2025 திங்கள் 00:09 | பார்வைகள் : 8510
2025 மே 31, சனிக்கிழமை இரவு, பாரிஸ் சன்-ஜெர்மேன் (PSG) தனது முதலாவது UEFA சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, பிரான்ஸ் முழுவதும் பல்வேறு வன்முறைகள், குழப்பங்கள் மற்றும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதுபோன்ற சம்பவங்கள், விளையாட்டு வெற்றிகளுக்கு பின்னர் அடிக்கடி இடம்பெறும் கொடூர நிகழ்வுகளின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகின்றன.
இருவர் உயிரிழப்பு – ஒரு சிறுவனும், ஒரு இளைஞரும்
17 வயதுடைய சிறுவன் ஒருவன் PSG வெற்றியைச் கொண்டாடும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தபோது கத்திக்குத்துக் காயத்தால் வாடகை மகிழுந்தில் சாவடைந்தான்.
பரிஸில், ஒரு இளைஞர் ஸ்கூட்டரில் சென்றபோது, வாகனமொன்று மோதியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
இதற்கு மேலாக, கிரெனொபிள் நகரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், வெற்றிக் கொண்டாட்டத்தில் ஒரு வாகனம் கூட்டத்தில் மோதியதனால் காயமடைந்துள்ளனர்.
மொத்தமாக, பிரான்ஸ் முழுவதும் சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர்.
பரிஸ் காவல்துறைத் தலைவர் லோரன்ட் நுனெஸ் (Laurent Nuñez) கூறுகையில்.
இந்தச் சூழ்நிலை வெற்றியும் இலை, தோல்வியும் இல்லை. சில சேதங்கள் ,ருந்தாலும், பல மோசமான செயல்களை நாங்கள் தடுப்பதில் வெற்றி பெற்றோம்.'
வலதுசாரி அரசியல் தலைவர்கள் கடும் விமர்சனத்துடன்
டேவிட் லிச்னார், கான் நகரபிதா
இப்போது பிரான்சில் மக்களின் மகிழ்வுத் திருவிழாக்களும் நடத்த முடியாத நிலைக்குவந்துவிட்டதா?'
எரிக் சியொட்டி, Union des droites pour la République:
'நமது நாட்டின் வீழ்ச்சியை நாம் ஏன் சுமூகமாகப் பார்க்க வேண்டும்?'
Nicolas Dupont-Aignan - Debout la France தலைவர்:
'சமுதாயம் ,டர்கொள்கின்றதை நாம் வெறும் பார்வையாளர்களாகவே பார்க்கலாமா?'
கடும் விமர்சனஙகள் மேற்கண்டவாறு எழுந்துள்ளன.
முந்தைய விளையாட்டு வெற்றிகள் – பல உயிரிழப்புகளும்
2018 உலகக்கோப்பை வெற்றிக்குப் பின்னர்:
ஒருவன் தனது வாகனத்துடன் மரத்துடன் மோதியதில் உயிரிழந்தான்.
இன்னொருவன் ஆழமான கால்வாயில் பாய்ந்ததால் கழுத்து முறிந்து உயிரிழந்தான்.
சோம்ப்ஸ் எலிசேயில் வன்முறைகள், கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
90 பேர் கைதுசெய்யப்பட்டதுடன் 40-க்கும் மேற்பட்ட காற்துறையினர் காயமடைந்தனர்.
2006 – பிரான்ஸ்-போர்த்துகல் அரை இறுதி பிறகு:
ஒருவன் மெட்ரோ ரயிலில் விழுந்து உயிரிழந்தான்.
இருவர் உந்துருளி விபத்தில் உயிரிழந்தனர்.
ஒரு பெண் மகிழுந்து கதவில் அமர்ந்து சென்ற போது தடுப்பில் மோதிக் காயமடைந்து இறந்தார்.
சார்லெத்தி (Charléty) மைதானத்தில் கத்திக்குத்து காரணமாக ஒருவர் உயிரிழப்பு.
1998 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு:
சோம்ப்ஸ எலிசேயில் இரண்டு வாகனங்கள் கூட்டத்தைக் மோதின:
ஒன்று மதுபோதையில் இருந்தவர் செலுத்தியது.
மற்றொன்று பயத்தால் கட்டுப்பாடிழந்த பெண் செலுத்தியது.
ஒருவரின் உயிரிழப்புடன், 140 பேர் காயமடைந்தனர்.
கொள்ளைச் சம்பவங்களும், கடை சேதங்களும் ஏற்பட்டன் பலர் கைது செய்யப்பட்டனர்.
இப்போதைய PSG வெற்றிக்குப் பின்னர்
அலோன்சோனில், PSG வெற்றியை ஒட்டி ஒரு வாகனம் கடைத்தொகுதியை மோத, கட்டிடம் தீபிடித்து எரிந்தது.
Le Manche பகுதியில், படர் வெடிபொருள் தாக்கியதால் ஒரு காவற்துறை அதிகாரிறை செயற்கை கோமாவில் வைத்துள்ளார்.
முழு நாட்டில் 559 பேர் கைது செய்யப்பட்டனர், அதில் 491 பேர் பாரிஸில் மட்டும்.
PSG,ன் வரலாற்றுச் சாதனையை ஒட்டிய மகிழ்ச்சியுடன் தொடங்கிய கொண்டாட்டங்கள், பல ,இடங்களில் கட்டுப்பாடற்ற வன்முறையாக மாறி, இருட்டான நினைவுகளை உருவாக்கியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் புதியவை அல்ல, ஆனால் இவை சமூக நிலையைக் குறித்த பெரும் சிந்தனையை தூண்ட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan