பஸ்தீனக் கொடி இஸ்லாமியவாதக் குழுக்களின் சின்னமாக மாறிவிட்டது - நகரபிதா!
1 ஆனி 2025 ஞாயிறு 21:54 | பார்வைகள் : 4659
'இப்போது பஸ்தீனக் கொடி என்பது கலவரக்காரர்களின் சின்னமாகவும், குடியரசு நிர்வாக அமைப்புகளுக்கு எதிராக செயல்படும் இஸ்லாமியவாதக் கூட்டங்களின் சின்னமாகவும் மாறியுள்ளது என சாலோன் நகரபிதா தெரிவித்துள்ளார்
இதனால், சாலோன் நகரில் மட்டும் அல்லாமல் அதன் சந்தைகளிலும் பஸ்தீனக் கொடியை விற்கும் செயல்கள் அனைத்தும் தடைசெய்யப்படும் என அறிவித்துள்ளார். சாலோன் நகரம் 45,000 மக்களுடன் Bourgogne இன் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். என Chalon-sur-Saône நகரபிதா ஜில் பிளாத்ரே (Gilles Platret) தெரிவித்துள்ளார்.
2014 இல், அதேபோல் நீஸ் நகரபிதர் கிறிஸ்தியான் எஸ்ட்ரோஸி, உதைபந்தாட்ட உலகக்கோப்பையின் போது ரசிகர்கள் வெளிநாட்டு கொடிகளை 'அடையாளமாக' பயன்படுத்த தடை விதித்தார். ஆனால் அந்தத் தடையை நீதிமன்றம் 'அத்துமீறல்' என கருதி நீக்கியது.
பிளாத்த்ரே என்பவர் பல சர்ச்சைகளுக்குள்ளான உத்தரவுகளை முன்பும் பிறப்பித்துள்ளார்:
2015ல் பள்ளிக்கூட உணவகங்களில் பன்றி இல்லா உணவை தடைசெய்தார்.
மது விநியோகங்களில் மொழியாக பிரெஞ்சை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார்.
பிரான்ஸ் மற்றும் துருக்கி பிரஜைகளின் திருமணத்தை நடத்த மறுத்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவால் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சுருக்கமாகச் சொல்வதானால், PSG வெற்றியைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களைத் தடுக்கும் முயற்சியாக, பஸ்தீனக் கொடியை 'அரசியல்பூர்வமாக வன்முறையை தூண்டும் சின்னமாக' வகைப்படுத்தி, அதனைத் தடைசெய்து, நீதிமன்றத் தடைச்சூழலில் சிக்கக்கூடிய மற்றொரு நடவடிக்கையை நகரபிதா பிளாத்த்ரே மேற்கொண்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan