'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் நடந்தது என்ன ?
1 ஆனி 2025 ஞாயிறு 16:54 | பார்வைகள் : 4514
ஜெயிலர்’ முதல் பாகத்தில், யோகி பாபு என்னை வச்சு செய்துவிட்டார். அதற்கு பதிலடியாக, இரண்டாம் பாகத்தில் நான் அவரை வச்சு செய்ய வேண்டும் என நெல்சன் இடம் ரஜினிகாந்த் கலகலப்பாக கூறியதாக, யோகி பாபு சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுபாக நடைபெற்று வரும் நிலையில், முதல் பாகத்தில் நடித்த பல நட்சத்திரங்கள் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர்.
அந்த வகையில், முதல் பாகத்தில் கார் டிரைவராக நடித்த யோகி பாபு, இரண்டாம் பாகத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் நிலையில், சமீபத்தில் அவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, "இந்த காலத்தில் சிறந்த நகைச்சுவை உணர்வுமிக்க இயக்குனர் என்றால் நெல்சனை தான் நான் சொல்வேன். படப்பிடிப்பின் போது ரஜினி சார் ரொம்பவே உற்சாகமாக இருக்கிறார். ரஜினி சார், நெல்சன் இடம் 'யோகி பாபுவை விடக்கூடாது. முதல் பாகத்தில் என்னை வச்சு செஞ்சிருக்கார். அதனால, இந்த பார்ட்டில் அவரை நான் வச்சு செய்வேன்' என்று நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்.
நான் என்ன கவுண்ட்டர் அடித்தாலும், ரஜினி சார் அதைவிட பிரம்மாதமாக இன்னொரு கவுண்ட்டர் அடித்து விடுகிறார். அதனால் நான் பயந்து கொண்டே இருக்கிறேன். அதனால்தான் அவர் இன்னும் 'சூப்பர் ஸ்டார்' ஆக இருக்கிறார்" என்று யோகி பாபு தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan