கிளிநொச்சியில் வாள்வெட்டு தாக்குதல்: இளைஞன் உயிரிழப்பு

1 ஆனி 2025 ஞாயிறு 15:56 | பார்வைகள் : 2735
பூநகரியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகரி தம்பிராய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர்.
சரமாரியாக மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் குறித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் பூநகரி செம்பங்குன்று பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை இச்சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025