La Manche எறிகணைப் வெடியால் காவற்துறை வீரர் படுகாயம்

1 ஆனி 2025 ஞாயிறு 13:37 | பார்வைகள் : 2007
பரிஸ் சன்-ஜெர்மன் (PSG) அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றதை தொடர்ந்து நடந்த கொண்டாட்டங்களின் போது, La Manche இல் ஒரு காவற்துறை அதிகாரி எறிகணை வெடியால் (mortiers d'artifice) படுகாயமடைந்த நிலையில் செயற்கை ஆழ்நிலை மயக்க நிலையில் (coma artificiel) வைக்கப்பட்டுள்ளார்.
தகவல்களின்படி, Coutances நகரில் உள்ள மையச் சந்தையில், ஒரு எறிகணை வெடி வீழந்து வெடித்ததில், அவரது கண் பகுதியில் தாக்கியதாக முதற்கட்ட விசாரணைகள் கூறுகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக, 'அதிகாரத்தினை பெற்ற ஒரு நபருக்கு வேண்டுமென்றே செய்த கடுமையான வன்முறை' என்ற குற்றத்திற்கான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக, Coutances அரச சட்டமா அதிபர் Gauthier Poupeau உறுதிப்படுத்தியுள்ளார்.