பிரான்சில் யூத தாக்குதல்... மக்ரோனைச் சாடிய இஸ்ரேலிய பிரதமர் !!
1 ஆனி 2025 ஞாயிறு 13:00 | பார்வைகள் : 4043
பிரான்சில் யூத விரோத தாக்குதல்கள் பதிவாகியுள்ளமை தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாஹு, பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் கடுமையாக சாடியுள்ளார்.
”பாலஸ்தீன அரசாங்கம் எனும் ஒன்றை ஏற்படுத்தும் திட்டத்தை மக்ரோன் கைவிடவேண்டும்!” என நெத்தன்யாஹூ தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை பரிசில் உள்ள ஐந்து யூத வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ”இந்த தாக்குதல் பிரான்சில் யூதர்களுக்கு எதிரான பரவலான தூண்டுதலின் நேரடி விளைவு” என குற்றம் நெத்தன்யாஹூ குற்றம் சாட்டியதுடன், அந்த தூண்டுதலை மக்ரோன் மேற்கொள்கிறார் எனவும் தெரிவித்தார்.
"யூத தாயகத்தின் (இஸ்ரேலில்) மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத பாலஸ்தீன அரசை உருவாக்குவதை ஊக்குவிப்பதை ஜனாதிபதி மக்ரோன் நிறுத்திவிட்டு, தனது சொந்த நாட்டில் யூத எதிர்ப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொடங்க வேண்டும்," என அவர் மேலும் தெரிவித்தார்.
பரிஸ் 4 ஆம் வட்டாரத்திலும், 20 ஆம் வட்டாரத்திலும் உள்ள யூத வழிபாட்டுத்தலமான synagogues இல், பச்சை நிற வண்ணங்களில் நிறம் பூச்சப்பட்டு அவை சேதமாக்கப்பட்டிருந்தன. கண்காணிப்பு கமராக்களில் உள்ள காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan