அதிக வெப்பத்தின் பின்னர் இடி மின்னல் தாக்குதல்... 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
1 ஆனி 2025 ஞாயிறு 11:45 | பார்வைகள் : 3840
இன்று ஜூன் 1, ஞாயிற்றுக்கிழமை காலை முதன் நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் கோடைகாலம் போன்ற வெப்ப நிலை நிலவி வரும் நிலையில், பிற்பகலின் பின்னர் வானிலை அப்படியே தலைகீழாக மாறும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிலும் Doubs , Jura , Ain , Saône -et-Loire , Loire , Rhône , Isère , Drôme , Ardèche மற்றும் Haute-Loire ஆகிய 10 மாவட்டங்களில் அதிகபட்ச மழையும், இடி மின்னல் தாக்குதல்களும் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டு அங்கு ‘செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாலை 4 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும், பொது இடங்கள், பூங்கா, கல்லறைகள், தோட்டங்கள் போன்றவற்றுக்குச் செல்பவர்கள் இந்த எச்சரிக்கை தொடர்பில் அவதானமாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை இரவு ஏற்கனவே பல மாவடங்களில் இடி மின்னல் தாக்குதல்கள் பதிவானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 15,000 இடி மின்னல் தாக்குதல்கள் Allier (Auvergne-Rhône-Alpes) மாவட்டத்தில் மட்டும் பதிவாகியிருந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan