புதிய மாதம்... புதிய மாற்றங்கள்!!
1 ஆனி 2025 ஞாயிறு 09:45 | பார்வைகள் : 11064
இன்று ஜூன் 1, முதலாம் திகதி.. இந்த புதிய மாதத்தில் பிரான்ஸ் பல புதிய மாறுதல்களை சந்திக்கிறது. அவை அனைத்தையும் தொகுக்கிறது இந்த பதிவு.
◉ சிகரெட் விலை அதிகரிப்பு!!
இன்று முதல் சிகரெட் பெட்டிகளின் விலை அதிகரிக்கிறது. 20 சிகரெட்டுகள் கொண்ட Marlboro Red பெட்டி ஒன்று 10.40 யூரோக்களில் இருந்து 10.95 யூரோக்களாக அதிகரிக்கிறது. Philip Morris King, , Marlboro Gold (100s) போன்ற பெட்டிகளின் விலையும் அதே அளவில் அதிகரிக்க உள்ளன.
◉ எரிவாயு கட்டணம் வீழ்ச்சி!!
எரிவாயு கட்டணங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் வீழ்ச்சியடைகிறது. கிலோவாட் மணிநேரத்துக்கான (kilowattheure (kWh) கட்டணம் 5.3% சதவீதத்தால் வீழ்ச்சியடைய உள்ளது. இதனால் மக்கள் வருடம் ஒன்றுக்கு 70 யூரோக்கள் வரை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
◉ வேலை தேடுவோர் மீது இறுக்கமான நடைமுறை!!
வேலை தேடுவோரைக் கண்காணிக்க இன்று ஜூன் 1 முதல் புதிய நடைமுறை செயற்படுத்தப்பட உள்ளதாக France Travail அறிவித்துள்ளது. அதன்படி, வேலை தேடுவோருக்கு வழங்க்கப்பட்ட வேலை வாய்ப்பு சந்தர்ப்பங்களை பயன்படுத்தாவிட்டால் தானியங்கி முறையில் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல், அது மேலும் இறுக்கமாக்கப்பட்டுள்ளது. வேலை தேடுபவர்கள் முழு மனதோடு அதனை மேற்கொள்கின்றார்களா என்பது தொடர்பில் ஆராயப்படும் எனவும், அதற்கு ஏற்றால் போல் அவர்களுக்கான நிபந்தனைகள் மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
◉ RATP குற்றப்பணம் அதிகரிப்பு!!
RATP தொடருந்து நிறுவனம் தனது குற்றப்பணத்தை அதிகரித்துள்ளது. பயணச்சிட்டை இல்லாமல் பயணித்தால் இதுவரை 50 யூரோக்கள் குற்றப்பணம் அறவிடப்பட்டிருந்த நிலையில், இன்று ஜூன் 1 முதல் அது 70 யூரோக்களாக அதிகரித்துள்ளது.
◉ TNT தொலைக்காட்சி எண்கள் மாற்றம்!
15 மற்றும் 16 ஆம் இலக்கத்தில் ஒளிபரப்பட்ட BFMTV மற்றும் CNews தொலைக்காட்சிகள் ஜூன் 6 ஆம் திகதி முதல் 13 மற்றும் 14 ஆம் இலக்கங்களில் ஒளிபரப்பாகும்.
26 மற்றும் 27 ஆம் இலக்கங்களில் ஒளிபரப்பான LCI மற்றும் franceinfo
தொலைக்காட்சிகள் 15 மற்றும் 16 ஆம் இலக்கங்களில் ஒளிபரப்பாகும்.
Channel+ தொலைக்காட்சியின் நான்காம் இடம் France 4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan