PSG வெற்றி.. என்ன சொல்கிறார் Kylian Mbappé..?? - சில மேலதிக தகவல்கள்!

1 ஆனி 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 6996
PSG அணி வெற்றி பெற்றதை அடுத்து, அணியின் முன்னாள் வீரரும், தற்போது Real Madrid அணியில் விளையாடி வருபவருமான Kylian Mbappé சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
PSG அணிக்கும் Mbappé இற்கும் இடையே கொடுக்கல் வாங்கல் பஞ்சாயத்து இடம்பெறுவதால், அவரது இந்த கருத்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
”"இறுதியாக அந்த பெரிய நாள் வந்துவிட்டது. வெற்றி, உண்மையான கிளப் பாணியில். வாழ்த்துக்கள், PSG, ” என பிரெஞ்சு அணியின் தலைவர் Mbappé தனது Instagram சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
◉◉
வெற்றி பெற்ற PSG அணி, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஜனாதிபதியின் எலிசே மாளிகைக்கு வருகை தர உள்ளது. அவர்களை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வரவேற்று வாழ்த்துக்களை தெரிவிக்க உள்ளார்.
ஜூன் 1, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது. அத்தோடு, சந்திப்பின் பின்னர் மக்ரோன் ஊடக சந்திப்பில் கலந்துகொள்வார் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
வெற்றி பெற்றவுடன், இம்மானுவல் மக்ரோன் தனது X வலைத்தள கணக்கில், “PSG-க்கு ஒரு புகழ்பெற்ற நாள் இன்று. ப்ராவோ. நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம். இன்று இரவு ஐரோப்பாவின் தலைநகரானது பரிஸ்!” என பதிவேற்றியுள்ளார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025