சாம்பியன் லீக் கிண்ணத்தை தனதாக்கியது PSG!! (பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..?)
1 ஆனி 2025 ஞாயிறு 05:30 | பார்வைகள் : 5592
2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன் லீக் கிண்ணத்தை PSG அணி வென்றுள்ளது. PSG அணி Inter Milan அணியை ஜேர்மனியில் வைத்து வீழ்த்தி சாம்பியன் ஆனது.
பரபரப்பான இறுதிப்போட்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் நிறைந்திருந்த முனிச் நகரின் Allianz Arena மைதானத்தில் நேற்று இரவு 9 மணிக்கு ஆரம்பமானது. போட்டியின் ஆரம்பம் முதலே PSG அணியின் கையே ஓங்கியிருந்தது. 5-0 எனும் கோல் கணக்கில் Inter Milan அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது PSG.
இறுதி வரை போராடிய Inter Milan எந்த ஒரு கோலினையும் அடிக்க முடியவில்லை.
PSG அணி சார்பாக போட்டி ஆரம்பித்த 12 ஆவது நிமிடத்திலேயே Achraf Hakimi முதலாவது கோலினை விளாசினார்.
பின்னர் 20 ஆவது நிமிடத்தில் Desire Doue ஒரு கோலினையும், பின்னர் அவரே 63 ஆவது நிமிடத்தில் ஒரு கோலினையும் என இரண்டு கோல்களை விளாசினார்.
Khavicha Kvaratshelia ஒரு கோலினையும் (73’), Senny Mayulu 86 ஆவது நிமிடத்தில் ஒரு கோலினையும் விளாசினார்.
மொத்தமாக ஐந்து கோல்கள் அடிக்கப்பட, எதிர்த்து போட்டியிட முடியாமல் திணறியது Inter Milan.
இதில் இரண்டு கோல்களை அடித்து அசத்திய Desire Doué இன் வயது வெறுமனே 19 ஆகும்.
வெற்றிபெற்ற PSG அணிக்கு, பரிசாக வெற்றிக்கேடயமும், €25 மில்லியன் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan