நண்பிகளிடையே ஆபத்தான விளையாட்டு: உயிரிழப்பில் முடிந்த இரவு!
31 வைகாசி 2025 சனி 22:55 | பார்வைகள் : 4525
Yvelines பகுதியிலுள்ள Montigny-le-Bretonneux உள்ள SQY Ouest வணிக மையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் நடந்த ஒரு விபத்தில் 19 வயது இளம் பெண் உயிரிழந்துள்ளார்.
காரின் முன்பகுதியில் அமர்ந்திருந்த அவர், ஓட்டுநர் உரிமம் இல்லாத தனது 18 வயது நண்பி காரை ஓட்டிய போது, சமநிலையை இழந்து சுவருக்கும் காருக்கும் இடையில் சிக்கி காயமடைந்துள்ளார். தீவிர சிகிச்சை அளித்தும், அவர் இரவு 11 மணிக்கு இறந்ததாக Samu மருத்துவ குழு உறுதி செய்துள்ளது.
விபத்தின் போது மூவர் சாட்சியாக இருந்துள்ளனர்; ஓட்டியவர் மற்றும் கார் உரிமையாளர் ஆகிய இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓட்டியவர் மீது அவதானம் இல்லாமல் ஒரு நபர் உயிரிழப்புக்கு காரணமானது மற்றும் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 23 வயதுடைய கார் உரிமையாளருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாதவரிடம் வாகனத்தை ஒப்படைத்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan