2024-ல் அதிக வரி செலுத்தி இருந்தால் உங்கள் பணத்தை திரும்ப பெறலாம்?
31 வைகாசி 2025 சனி 15:35 | பார்வைகள் : 4768
2025-ல் சில பேர் கடந்த ஆண்டில் அதிகமாக வரி செலுத்தியிருக்கக்கூடும். இவர்களுக்கு வரித்துறை தானாகவே பணத்தை திருப்பிச் செலுத்தும்.
உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் வரித்துறைக்கு தெரிந்திருந்தால், ஜூலை 25 அல்லது ஆகஸ்ட் 1 அன்று நேரடி வங்கிக் பரிவர்த்தனையாக (virement) பணம் செலுத்தப்படும். இல்லை என்றால், ஜூன் மாத முடிவிற்கு முன், உங்கள் விவரங்களை புதுப்பிக்கபடாவிட்டால், தபாலில் காசோலையாக (chéque) அனுப்பபடும்.
உங்கள் வரி அறிவிப்பு impots.gouv.fr இணையதளத்தில் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1 வரை கிடைக்கும். மற்றொரு தரப்பில், சிலர் செப்டம்பரில் வரி துறைக்கு மேலதிகமாக பணம் செலுத்த வேண்டியவர்களாக இருக்கலாம்.
இது கடந்த ஆண்டு போதிய அளவு பிரேலெவ்மோ (prélevément ) இல்லாததால் ஏற்படும். குறிப்பாக சூழ்நிலைகளில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து உங்கள் தரவுகளை நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால் இந்நிலைமை ஏற்படும்.
நீங்கள் செலுத்த வேண்டிய தொகை 300 யூரோக்களுக்கு குறைவாக இருந்தால் ஒரே கட்டணமாக செப்டம்பரில் எடுக்கப்படும். 300 யூரோக்களுக்கு அதிகமானால், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை, பணம் நான்காக பிரிக்கப்பட்டு உங்கள் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்படும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan