வேலை இல்லாதவர்களுகான சலுகைகள் இடைநிறுத்தம்!

31 வைகாசி 2025 சனி 13:15 | பார்வைகள் : 5245
2023ஆம் ஆண்டு "முழு வேலைவாய்ப்பு சட்டத்தின்" அடிப்படையில், வேலை தேடுபவர்களுக்கு புதிய தண்டனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இப்போது, வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் (contrat d'engagement) குறித்த கடமைகளை பூர்த்தி செய்யத் தவறினால், வேலை தேடுபவரின் பண உதவியில் குறைந்தது 30% குறைப்பு மேற்கொள்ளப்படும். மேலும் இந்த குறைப்பு, முதல் இரண்டு மாதங்கள் வரை நீடிக்கலாம் என்று France Travail தெரிவித்துள்ளது.
மீண்டும் மீண்டும் தவறுகள் நிகழ்ந்தால், தற்காலிகமாகவே அல்லாமல் முழுமையாகவே உதவித்தொகை நிறுத்தப்படலாம், இது நான்கு மாதங்கள் வரை நீடிக்கப்படும்.
இந்த திட்டத்தின் நோக்கம், வேலை தேடுபவர்களை தூண்டி, அவர்களின் தேடல் பயணத்தில் அவர்களை வழிநடத்துவதாகும். ஒரு சந்திப்பில் பங்கேற்காததற்காக மட்டும் தண்டிக்காமல், உண்மையான வேலை தேடல் முயற்சியை அடிப்படையாகக் கொண்டு தண்டனை அளிக்கப்படும். புதிய முறை பரிசோதிக்கப்பட்ட எட்டு மாகாணங்களிலும் தண்டனை அளவு அதிகரிக்கப்படவில்லை.