சாம்பியன் லீக் இறுதிப்போட்டி : Parc des Princes அரங்கில் நேரலை.. 48,000 நுழைவுச் சிட்டைகள் விற்பனை!!
31 வைகாசி 2025 சனி 10:42 | பார்வைகள் : 4498
இன்று மே 31, சனிக்கிழமை சாம்பியன் லீக் போட்டியின் பரபரப்பான இறுதிப்போட்டி இடம்பெற உள்ளது. ஜேர்மனியின் முனிச் நகரில் இடம்பெற உள்ள இந்த போட்டி Parc des Princes மைதானத்தில் நேரலையாக காண்பிக்கப்பட உள்ளது. போட்டியைக் காண இதுவரை 48,000 பேர் நுழைவுச் சிட்டைகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.
PSG மற்றும் Inter Milan அணிகளுக்கிடையிலான இந்த போட்டி இன்று இரவு 9 மணிக்கு ஆரம்பமாகிறது. இந்த போட்டியினை Parc des Princes அரங்கில் இராட்சத திரை அமைத்து நேரலையாக காண்பிக்கப்பட உள்ளது. 18 மீற்றர் நீளமும், 10 மீற்றர் உயரமும் கொண்ட இந்த திரையில் போட்டியைக் காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
குறிப்பாக PSG அணியின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இருப்பதாக இணையத்தில் எழுதி வருகின்றனர்.
அதேவேளை, இந்த போட்டிக்காக சோம்ப்ஸ்-எலிசே பகுதியில் இன்று பிற்பகலில் இருந்து பலத்த பாதுகாப்பு போடப்படும் எனவும் அங்கு 4,400 காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan