இந்தோனேசியாவில் பயங்கர கல்குவாரி விபத்து - 10 பேர் பலி
31 வைகாசி 2025 சனி 11:52 | பார்வைகள் : 2552
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர கல்குவாரி விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிரெபோன் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஏற்பட்ட பயங்கர கல்குவாரி விபத்தில் குறைந்தது பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், ஆறு பேர் இன்னும் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில், இயற்கை கல் குவாரியில் பணிபுரிந்த இருபதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.
உள்ளூர் காவல்துறை தலைவர் சுமர்ணி தெரிவித்த தகவலின்படி, மீட்பு படையினர் இதுவரை பத்து சடலங்களை மீட்டுள்ளனர்.
அத்துடன், இடிபாடுகளில் இருந்து காயமடைந்த பன்னிரெண்டுக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஆறு பேருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகள் பெரும் சவால்களை எதிர்கொண்டன. மண்சரிவு ஏற்படும் அபாயம் இருந்ததாலும், மோசமான வானிலை மற்றும் குறைவான வெளிச்சம் காரணமாகவும் வெள்ளிக்கிழமை மாலை மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
காணாமல் போனவர்களை தேடும் பணி சனிக்கிழமை அதிகாலை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அகழ்வாராய்ச்சி கருவிகள் மற்றும் லாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan