தி.மு.க.,வை தனித்து நின்றே தோற்கடிப்போம்: சீமான்
31 வைகாசி 2025 சனி 07:57 | பார்வைகள் : 2538
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:
அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நா.த.க., தான், தமிழகத்தில் பெரிய கட்சி. சட்டசபையில் மக்களுக்காக பேசும் குரல் இல்லை. இந்த முறை உறுதியாக சட்டசபைக்குச் செல்வோம்.
உலகின் முதல் மொழி தமிழ் எனக் கூறிவிட்டு, பார்லிமென்ட் கட்டடத்தில் தமிழில் கல்வெட்டு வைக்கவில்லை. தமிழை ஏற்றுக் கொள்ளாத ஈ.வெ.ரா.,வை 'தமிழர் தந்தை' என்கின்றனர்.
ராஜ்யசபா தேர்தலில் கமலுக்கு சீட் கொடுத்தது போல், வைகோவுக்கும் கொடுத்திருக்க வேண்டும். பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும் அன்புமணிக்குமான கருத்து வேறுபாடு சரியாகி விடும்.
த.வெ.க., தமிழக அரசியலில் நுழைந்திருப்பதால், எங்களுக்கான ஓட்டு வங்கி குறையாது. தி.மு.க.,வை எதிர்க்க யாருக்கும் சத்தி இல்லை என்பது போல் சொல்கின்றனர். ஆனால், நா.த.க., தனித்து நின்றே தி.மு.க.,வை தோற்கடிக்கும். அதனால், எந்த கூட்டணியிலும் சேர மாட்டோம்.
கொள்கை ரீதியாக மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேருவது கடினம். அப்படியொரு கூட்டணி எங்களுக்கு ஒரு நாளும் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan