PSG இல் பிட்கொயின்!
31 வைகாசி 2025 சனி 02:05 | பார்வைகள் : 4286
PSG கால்பந்து கழகம் முதல் முறையாக தனது கருவூலத்தில் பிட்கொயினைத் தனது கருவூலததில் இணைத்துள்ளது.
ஒரு பெரிய பிரெஞ்சு கால்பந்து கழகத்தில் இருந்து, PSG விளையாட்டுத் துறையைத் தாண்டி விரிவடைய விரும்புகிறது. லாஸ் வேகாஸில் நடந்த கிரிப்டோ பணமாகிய பிட்கொயின் 2025 மாநாட்டில் PSG LABS ன் தலைவரான பார் ஹெல்கோசன் (Pär Helgosson) வெளியிட்ட அறிவிப்பில் இந்த தொலைநோக்கு பிரதிபலிக்கிறது.
தொழில் வல்லுநர்களின் பேசிய அவர், 2024 ஆம் ஆண்டில் மூலதன கழகத்தில் தனது கணக்குகளில் பிட்கொயின் (டீவுஊ) ஐ ஒருங்கிணைத்ததாக அறிவித்தார்.
இளைஞர்களிடையே Pளுபு இன் பாரிய பார்வையாளர்களுடன், புதிய தலைமுறையின் விளையாட்டுக் கழகமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் அதன் விருப்பத்தால் இந்த அறிவிப்பு நியாயப்படுத்தப்படுகிறது.
'PSG உலகளவில் கிட்டத்தட்ட 550 மில்லியன் ரசிகர்களைக் கொண்டுள்ளது, மேலும் இந்த சமூகத்தில் 80சதவீதமானோர் பேர் 34 வயதுக்குட்பட்டவர்கள்' என்று பார் ஹெல்கோசன் விளக்கி உள்ளார்.
பிட்கொயினின் ஒருங்கிணைப்பு என்பது கழகத்தின் பெரிய உத்தியின் ஒரு பகுதியாகும், இது Station F உடன் இணைந்து PSG LABS உருவாக்குவதன் மூலம் உறுதிசெய்யப்படுகின்றது. குறிப்பாக IA மற்றும் WEB3 துறைகளில் புதுமையான திட்டங்களில் கவனம் செலுத்தும் கழகத்தின் ஒரு தொடக்க முயற்சியாகும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan