Paristamil Navigation Paristamil advert login

'அமெரிக்காவின் யுத்த நிறுத்த திட்டம் - எமது வேண்டுகோள்களை கருத்திலெடுக்கவில்லை" - ஹமாஸ்

'அமெரிக்காவின் யுத்த நிறுத்த திட்டம் - எமது வேண்டுகோள்களை கருத்திலெடுக்கவில்லை" - ஹமாஸ்

30 வைகாசி 2025 வெள்ளி 19:16 | பார்வைகள் : 2415


அமெரிக்க முன்வைத்துள்ள யுத்தநிறுத்த திட்டம் தனது வேண்டுகோள்களை நிறைவேற்ற தவறியுள்ளது என தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பு எனினும் அதனை ஆராய்ந்துவருவதாக  தெரிவித்துள்ளது.

யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவது ,உட்பட முக்கிய வேண்டுகோள்களிற்கு அமெரிக்க தீர்வு திட்டத்தில் எந்த பதிலும் இல்லை என ஹமாசின் சிரேஸ்ட அதிகாரியொருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

எனினும் விரைவில் பதிலளிக்க உள்ளதாக அவர்தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் யுத்தநிறுத்த திட்டம் இஸ்ரேலின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கின்றது என தெரிவித்துள்ள ஹமாசின் சமி அபு ஜூஹ்ரி யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவது,இஸ்ரேலிய படையினரை விலக்கிக்கொள்வது  போன்ற விடயங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

காசாவில் அறுபது நாள் யுத்த நிறுத்தம் பணயக்கைதிகள் விடுதலை உட்பட பல யோசனைகளை உள்ளடக்கிய 60 நாள் யுத்தநிறுத்த திட்டமொன்றை அமெரிக்கா முன்வைத்துள்ளது.

 

11 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026