இஸ்ரேலிற்கு எதிராக மக்ரோன் - இஸ்ரேல் பகிரங்கக் குற்றச்சாட்டு
30 வைகாசி 2025 வெள்ளி 16:19 | பார்வைகள் : 8029
பிரஞ்சு ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், காசாவில் ஏற்பட்ட மனிதாபிமான நெருக்கடியை மையமாக கொண்டு, இஸ்ரேலுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் தங்களின் கூட்டுப் போக்கை கடுமையாக்க வேண்டும் என சிங்கப்பூரில் தெரிவித்துள்ளார்.
இதற்குத் பதிலளித்த இஸ்ரேல், மக்ரோனை 'யூத அரசுக்கு எதிரான பிரச்சாரத்தில்; ஈடுபடுகிறார்' என இன்று (வெள்ளிக்கிழமை) குற்றம் சுமத்தியது.
'மனிதாபிமான தடை என்பது பொய்யான குற்றச்சாட்டு. மக்ரோன் பயங்கரவாதிகளுக்கு பாலஸ்தீன அரசை தர முயற்சிக்கிறார் என இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதுவும் 2023இல் பலஸ்தீனம் இஸ்ரேல் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடந்த ஒக்டோபர் 7ம் திகதியையே பலஸ்தீன சுதந்திர நாளாகவும் மக்ரோன் அறிவிக்கக் கூடும் எனத் தங்களது கோபத்தினை மக்ரோன் மீது தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது கடமையோடு அரசியல் தேவையாகவும் உள்ளது.இது தொடர்பான ஐ.நா. மாநாட்டில் ஜூன் 18இல் பங்கேற்கவுள்ளார். மேற்கத்திய நாடுகள் காசாவை விட்டுவிட்டால், உலக நம்பிக்கையை இழக்க நேரிடும் என்றும் மக்ரோன் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் எதிரொலியே இஸ்ரேலின் மக்ரோனிற்கு எதிரான் கோபம்.
உலகின் பிரச்சினைகளில் தீவிரம் காட்டும் மக்ரோன் நாட்டிற்குள் விலைவாசியினால் மக்கள் படும் துன்பத்தைக் காண மட்டும் நேரமில்லாது இருக்கின்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan