ஹீரோவாக களம் இறங்கும் 'சூப்பர் சிங்கர்' பூவையார்
30 வைகாசி 2025 வெள்ளி 15:33 | பார்வைகள் : 5445
விஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர்' என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமான பூவையார், தற்போது ஹீரோவாக நடித்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சூப்பர் சிங்கர்' என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பூவையார். இந்த நிகழ்ச்சியில் அவர் காமெடியாக பேசியதும், தொகுப்பாளினி பிரியங்காவை கலாய்த்ததும், அதுமட்டுமின்றி கானா பாடல் மூலம் தனது திறமையை நிரூபித்ததும், அவர் புகழ் பெற காரணமாக இருந்தது.
இந்த புகழின் அடிப்படையில், அவருக்கு விஜய் நடித்த 'பிகில்' மற்றும் 'மாஸ்டர்' ஆகிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி, விஜய் சேதுபதியின் 'மகாராஜா', பிரசாந்தின் 'அந்தகன்' படத்திலும் அவர் நடித்திருந்தார்.
இந்த நிலையில், குழந்தை நட்சத்திரமாக நடித்த பூவையார் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். 'ராம் அப்துல்லா ஆண்டனி' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியான நிலையில், இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தை ஜெயவேல் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும், 'அன்னை வேளாங்கண்ணி ஸ்டூடியோ' என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan