ஜூன் 1 முதல்...
30 வைகாசி 2025 வெள்ளி 15:19 | பார்வைகள் : 8848
ஜூன் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல், எரிவாயு விலையைக் குறைத்ததுடன், வேலை தேடலுக்கான கண்காணிப்பு தொடர்பான புதிய விதிமுறைகள் France Travail மூலமாக நடைமுறைக்கு வரும். மேலும், ஜூன் 6 ஆம் தேதி முதல் வுNவு தொலைக்காட்சி சேவைகளின் எண்கள் புதிய முறையில் ஒதுக்கப்படும்.
எரிவாயு விலை
கோடை காலம் நெருங்கும் நிலையில், ஜூன் மாத மின் மற்றும் எரிவாயு கட்டணங்களில் சிறிய நற்செய்தி ஒன்று காத்திருக்கின்றது. ஜூன் 1 ஆம் தேதி முதல், எரிவாயு விலை 5.3 சதவீதம் வீழ்ச்சியடையும் என்றும் அதுவே தொடரும் எனவும் அரசு அறிவித்துள்ளது. இது ஏற்கனவே மே மாதத்தில் ஒரு முறை குறைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சில சிகரெட்டுகளின் விலை உயர்வு
ஜூன் 1 ஆம் தேதி முதல், பிரான்ஸ் முழுவதும் பல சிகரெட் வகைகளின் விலைகள் உயரும். இது 20 மற்றும் 25 சிகரட்டுகள் கொண்ட பெட்டிகள்; ஆகிய இரண்டிற்கும் பொருந்தும். அதிகம் விற்பனை செய்யப்படும் Marlboro, Philip Morris, Chesterfield போன்ற வகைகளும் இதில் அடங்கும்.
வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கான கண்காணிப்பு
France Travail இல் பதிவு செய்திருக்கும் பணியிழந்தவர்கள், உறுப்பினர் - ஆலோசகர் சந்திக்க முடியாமை காரணமாக இனி தானாகவே தண்டனையை எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஆனால், வேலை தேடல் நடவடிக்கைகள் முழு நாட்டிலும் தீவிரமாக கண்காணிக்கப்படும். முன்பு ஒரு சந்திப்பிற்குச் செல்லாமல் விட்டு அது நியாயப்படுத்தப்படாவிட்டால் மாதக் கொடுப்பனவு துண்டிக்கப்படும் நிலை இருந்தது.
TNT தொலைக்காட்சியில் புதிய சேனல் எண்கள்
ஜனவரி 9 ஆம் தேதி Arcom எடுத்த முடிவின் அடிப்படையில், ஜூன் 6 ஆம் தேதி முதல் TNT சேவைகளில் புதிய எண்கள் அமலுக்கு வரும். இப்போது CNEWS சேவை எண் 14-ல் ஒதுக்கப்படும். BFMTV (13), LCI (15), Franceinfo (16) என புதிய ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன. NOVO19 மற்றும் T18 என இரண்டு புதிய சேவைகள் தொடங்கப்படுகின்றன. Canal+ தற்போது வெளியேறி, அதன் இடத்தை France 4 (எண் 4) எடுக்கிறது.
திறன் கைத்தொலைபேசிகளிற்கு (Smart Phone) எரிசக்தி அடையாளம்
ஜூன் 20 ஆம் தேதி முதல், கடைகளில் அல்லது இணையத்தில் கொள்வனவு செய்யப்படும் கைத்தெலைபேசிகளிற்கும், மடிக்கணினிகளிற்கும் புதிய எரிசக்தி அடையாளம்; ஒட்ட வேண்டியது அவசியம். இதில் கீழ்க்கண்ட தகவல்கள் கட்டாயமாக அறிவிக்கப்படல் வேண்டும்.
- கீழே வீழும் போது கைத்தொலைகேபசியின் உறுதியான தன்மை
- பழுது ஏற்படும்போது சரி செய்யும் சாத்தியம் (சுépயசயடிடைவைé)
- பேட்டரி ஆயுள்
- தூசி மற்றும் நீருக்கு எதிரான பாதுகாப்பு
ஆகியவை தரப்படுத்தப்படல் வேண்டும்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan