சமூக நல வீட்டில் குடியிருப்போருக்கு வாடகைக் குறைப்பு !!
30 வைகாசி 2025 வெள்ளி 14:30 | பார்வைகள் : 5212
ஒரு சமூக வீட்டில் வாடகைதாரராக இருப்போருக்கு ஜூன் 1 முதல் வருமான அடிப்படையில் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் Réduction de loyer de solidarité எனப்படும் வாடகைக் குறைப்பை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த உதவி மிகவும் நெருக்கடியில் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த வீட்டு வாடகைக் குறைப்பு உங்கள் குடும்ப எண்ணிக்கையையும், உங்கள் வீடு அமைந்துள்ள இடத்தையும் அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும்.
இதில் நீங்கள் APL பெற்றாலும், இல்லாவிட்டாலும் RLS-ல் இருந்து பயனடையலாம். மேலும் RLS தொகைகள் வருமானத்தை பொறுத்து தானாகவே கணக்கிடப்பட்டு பெற்றுக் கொள்ள கூடியதாக இருக்கும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan