Paristamil Navigation Paristamil advert login

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொம்மையை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொம்மையை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சி

30 வைகாசி 2025 வெள்ளி 14:02 | பார்வைகள் : 8992


கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், இன்று அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனையில் 10 கிலோ 323 கிராம் கொகெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, இந்த போதைப்பொருளை விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வந்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 38 வயதுடைய இத்தாலிய பிரஜையாவார்.

சந்தேக நபர் இந்த போதைப்பொருளை மூன்று டெடி பியர் (Teddy Bear) பொம்மைகளுக்குள் மறைத்து கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்