சோம்ப்ஸ்-எலிசேயில் 4,500 காவல்துறையினர் குவிப்பு!!
30 வைகாசி 2025 வெள்ளி 12:36 | பார்வைகள் : 7475
PSG எதிர் Inter அணிகளுக்கிடையே இடம்பெற உள்ள சாம்பியன் லீக் இறுதிப்போட்டிக்காக சோம்ப்ஸ்-எலிசே பகுதி பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் முனிச் நகரில் உள்ள Allianz Arena அரங்கில் நாளை இரவு இடம்பெற உள்ள இந்த போட்டி, சோம்ப்ஸ்-எலிசேயில் இராட்சத திரையில் ஒளிபரப்பப்பட உள்ளது. அதனைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அதை அடுத்தே சோம்ப்ஸ்-எலிசே பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதேவேளை, அப்பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மாலை 7 மணியுடன் மூடப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மே 31, சனிக்கிழமை நண்பகல் முதல் அங்கு போக்குவரத்து தடைகள் விதிக்கப்பட்டு, பாதசாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. ரசிகர்கள் சோதனையிடப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan