பிரெஞ்சு இராணுவத்தினர் மீது வீண்பழி சுமத்தும் ரஷ்யா..!!
30 வைகாசி 2025 வெள்ளி 10:57 | பார்வைகள் : 6248
பிரெஞ்சு இராணுவத்தினர் மீது ரஷ்யா வீண்பழி சுமத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் மேற்கு பகுதியில் ஐரோப்பிய இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை அறிந்ததே. பிரெஞ்சு பிரித்தானிய மற்றும் ஜேர்மனிய படைகள் அங்கு நிலைகொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பிரெஞ்சு படையினர் ருமேனியாவின் எல்லைகளில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர்.
ருமேனியாவில் தேர்தல் இடம்பெற உள்ளதால், அங்கு பிரெஞ்சு இராணுவம் உள்ளூர் கலவரங்கள் எதனையும் ஏற்படுத்தாமல் தடுக்க பிரெஞ்சு இராணுவத்தினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ருமேனியாவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் George Simion, ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடன் நெருக்கமாக இருக்கின்றார். ஒருவேளை அவர் வெற்றி பெற்றால் பிரெஞ்சு இராணுவத்தினரின் உதவியுடன் அங்கு ஆட்சி கவிழ்ப்பு இடம்பெறும் என இரஷ்ய ஆதரவாளர்கள் பிரெஞ்சு இராணுவத்தினரை இலக்கு வைத்து அவதூறு பரப்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan