மரீன் லூபென் 2027த் தேர்தலுக்குத் திரும்ப உறுதி - பொர்தெல்லாவையும் உறுதி செய்கிறார்!
29 வைகாசி 2025 வியாழன் 20:09 | பார்வைகள் : 5129
தேசியப் பேரவையான RN (Rassemblement National) கட்சியின் மரீன் லூபென், நுவல் கலேதூனியில் இருக்கும் போதே, 2027 ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக உறுதி செய்தார்.
தற்போது தடை இருந்தாலும், அவர் மேல் முறையீடு செய்துள்ளதால், தற்போதைக்கு தேர்தலுக்குத் தகுதி பெறலாம்.மேலும், கட்சியின் தற்போதைய தலைவரான ஜோர்டன் பார்தெல்லா குறித்தும் கருத்து தெரிவித்தார்.
«பார்தெல்லாவுக்கு Nouvelle-Calédonie பிரச்சனைகள் பற்றிய அறிவு குறைவாக இருக்கலாம். ஆனால் நாங்கள் எங்களிற்குள் திறமைகளைப் பகிர்ந்து கொள்கின்றோம்» எனத் தெரிவித்தார்.
«நான் எதிலும் சிக்க விரும்பவில்லை. என் அறிவை குறைத்து அவர் எதுவும் சொல்லவில்லை. இதை உங்கள் அரசியல் ஆக்க வேண்டாம்» என மற்றைய கட்சிகளின் சிண்டு முடியும் வேலைகளைக கண்டித்துள்ளார்.
மரின் லூப்பன் ஜூன் மாதம் நடைபெறும் கலந்துரையாடல்களில் பங்கேற்க மக்ரோனுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் அவரது குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மரீன் லூபனுக்கு மார்ச் 31 அன்று ஐந்து வருட அரசியல் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் மேல் முறையீடு செய்துள்ளதால், இன்னமும் தேர்தலுக்குத் தகுதியைப் பெறும் வாய்ப்பு உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan